| 245 |
: |
_ _ |a குப்பல் நத்தம் சமணக் கோயில் - |
| 246 |
: |
_ _ |a சமணக்குகை கோயில் |
| 520 |
: |
_ _ |a குப்பல் நத்தம் மலையில் அமைந்துள்ள சமணக் குடைவரைக் கோயில் தரையிலிருந்து 100 மீ. உயரத்தில் உள்ளது. தற்போது உள்ளுர் மக்களால் வைதீகக் கோயிலாகக் கருதப்பட்டு வணங்கப்பட்டு வருகின்றது. தீர்த்தங்கரர் உருவங்களின் மீது எண்ணெய் பூசி, மஞ்சள், குங்குமப் பொட்டிட்டு வைதீகக் கடவுளர்களாக எண்ணி வழிபடுகின்றனர். சித்ரா பௌர்ணமி தினத்தன்று ஊர்த்திருவிழா நடைபெறும் போது இக்கோயிலில் பொங்கல் வைத்து படையல் செய்கின்றனர். மேலும் ஊரில் மழை பெய்யாவிட்டால், இவ்வூர் ஆண்கள் மட்டும் இக்கோயிலுக்குச் சென்று, ஆடு வெட்டி பலி கொடுத்து பூசை செய்து கும்பிடுகிறார்கள். |
| 653 |
: |
_ _ |a சமணம், கோயில், தீர்த்தங்கரர், குடைவரை, வட்டெழுத்து, மதுரை, குப்பல் நத்தம், பொய்கை மலை, ஆண்டிப்பட்டி, ஜைனம், உசிலம்பட்டி |
| 700 |
: |
_ _ |a காந்திராஜன் க.த. |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 905 |
: |
_ _ |a கி.பி.9-10-ஆம் நூற்றாண்டு / அச்சணந்தி முனிவர் |
| 909 |
: |
_ _ |a 6 |
| 910 |
: |
_ _ |a 1100 ஆண்டுகள் பழமையானது. சமணக் குடைவரைக் கோயில். |
| 914 |
: |
_ _ |a 9.82384763 |
| 915 |
: |
_ _ |a 77.81722124 |
| 916 |
: |
_ _ |a சமணத் தீர்த்தங்கரர்கள் |
| 918 |
: |
_ _ |a பத்மாவதி, பிராம்மி, சுந்தரி |
| 926 |
: |
_ _ |a சித்ரா பௌர்ணமி தினம் |
| 927 |
: |
_ _ |a தீர்த்தங்கரர் உருவங்களின் கீழ் ஒரு சிதைந்த வட்டெழுத்துக் கல்வெட்டு காணப்படுகின்றது. இங்குள்ள தீர்த்தங்கரர்களில் ஐந்து திருமேனிகளை ஐவர் செய்தளித்துள்ளனர். அவர்களுள் ஒருவர் பெண் அடியார் என்று கல்வெட்டு குறிப்பிடுகின்றது. |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 929 |
: |
_ _ |a இக்குடைவரைக் கோயிலில் சமணத்தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்கள் வழிபாட்டில் உள்ளன. மகாவீரர், பார்சுவநாதர், பாகுபலி போன்ற தீர்த்தங்கரர்களின் உருவங்கள் காலத்தால் முந்திய சிற்பக் கலைப்பாணியில் அமைந்துள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. |
| 930 |
: |
_ _ |a பக்தி இயக்க காலத்திற்கு பின் தமிழகத்தில் மீண்டும் சமணம் கி.பி.9-10-ஆம் நூற்றாண்டுகளில் தழைத்தோங்கியது. அக்காலக்கட்டத்தில் குறண்டி, திருக்காட்டுப்பள்ளி, குப்பல் நத்தம், உத்தமபாளையம், பழனி ஐவர் மலை போன்ற பல புதிய மலைகளில் சமணப்பள்ளிகள் தோன்றின. இத்தகைய சமண சமய எழுச்சிக்கு காரணமாக அமைந்த சமணத் துறவி அச்சணந்தி தமிழகமெங்கும் இத்தகு சமணக்குடைவரைகளைத் தோற்றுவித்து, தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்களை வழிபாட்டிற்காக அமைத்தார். |
| 932 |
: |
_ _ |a குடைவரை போன்ற அமைப்பில் பெரும் பாறையின் கீழே கோயில் போன்று மலைப்பாறையில் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இக்குடைவரையில் மூன்று சிற்பத் தொகுதிகள் காட்டப்பட்டுள்ளன. முதல் தொகுதியில் அமர்ந்த நிலையில் உள்ள தீர்த்தங்கரர்களின் உருவங்கள் முக்குடையுடன் காட்டப்பட்டுள்ளன. அடுத்தத் தொகுதியில் நின்ற நிலையில் இரண்டு தீர்த்தங்கரர் உருவங்களும், அமர்ந்த நிலையில் உள்ள தீர்த்தங்கரர் உருவமும் அமைக்கப்பட்டுள்ளன. மூன்றாவது தொகுதியில் பாகுபலி சிற்பம் காட்டப்பட்டுள்ளது. |
| 933 |
: |
_ _ |a உள்ளூர் மக்களால் நிர்வகிக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளது. |
| 934 |
: |
_ _ |a ஆனையூர் ஐராவதேஸ்வரர் கோயில், சிந்துபட்டி பெருமாள் கோயில், எழுமலை, புத்தாம்பட்டி ஜைனக்கோயில் |
| 935 |
: |
_ _ |a உசிலம்பட்டியிலிருந்து சேடப்பட்டி செல்லும் சாலையில் சின்னக்கட்டளைப் பிரிவிலிருந்து சுமார்2 கி.மீ. கிழக்காக சென்றால் குப்பல்நத்தம் அமைந்துள்ளது. |
| 937 |
: |
_ _ |a சின்னக்கட்டளை, குப்பல் நத்தம் |
| 938 |
: |
_ _ |a மதுரை |
| 939 |
: |
_ _ |a மதுரை |
| 940 |
: |
_ _ |a மதுரை நகர விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_000121 |
| barcode |
: |
TVA_TEM_000121 |
| book category |
: |
சமணம் |
| cover images TVA_TEM_000121/TVA_TEM_000121_குப்பல்நத்தம்_சமணக்குடைவரை-கோயில்_வெளிப்புறத்தோற்றம்-0001.jpg |
: |
|
| Primary File |
: |
TVA_TEM_000121/TVA_TEM_000121_குப்பல்நத்தம்_சமணக்குடைவரை-கோயில்_வெளிப்புறத்தோற்றம்-0001.jpg
TVA_TEM_000121/TVA_TEM_000121_குப்பல்நத்தம்_சமணக்குடைவரை-கோயில்_கோயில்-அமைப்பு-0002.jpg
TVA_TEM_000121/TVA_TEM_000121_குப்பல்நத்தம்_சமணக்குடைவரை-கோயில்_தீர்த்தங்கரர்-0003.jpg
TVA_TEM_000121/TVA_TEM_000121_குப்பல்நத்தம்_சமணக்குடைவரை-கோயில்_தீர்த்தங்கரர்-0004.jpg
TVA_TEM_000121/TVA_TEM_000121_குப்பல்நத்தம்_சமணக்குடைவரை-கோயில்_பாகுபலி-0005.jpg
TVA_TEM_000121/TVA_TEM_000121_குப்பல்நத்தம்_சமணக்குடைவரை-கோயில்_பார்சுவநாதர்-0006.jpg
TVA_TEM_000121/TVA_TEM_000121_குப்பல்நத்தம்_சமணக்குடைவரை-கோயில்_தீர்த்தங்கரர்-0007.jpg
TVA_TEM_000121/TVA_TEM_000121_குப்பல்நத்தம்_சமணக்குடைவரை-கோயில்_தீர்த்தங்கரர்-0008.jpg
TVA_TEM_000121/TVA_TEM_000121_குப்பல்நத்தம்_சமணக்குடைவரை-கோயில்_தீர்த்தங்கரர்-0009.jpg
TVA_TEM_000121/TVA_TEM_000121_குப்பல்நத்தம்_சமணக்குடைவரை-கோயில்_தீர்த்தங்கரர்-0010.jpg
TVA_TEM_000121/TVA_TEM_000121_குப்பல்நத்தம்_சமணக்குடைவரை-கோயில்_குடைவரை-அமைப்பு-0011.jpg
TVA_TEM_000121/TVA_TEM_000121_குப்பல்நத்தம்_சமணக்குடைவரை-கோயில்_புடைப்புச்-சிற்பங்கள்-0012.jpg
TVA_TEM_000121/TVA_TEM_000121_குப்பல்நத்தம்_சமணக்குடைவரை-கோயில்_புடைப்புச்-சிற்பங்கள்-அமைப்பு-0013.jpg
TVA_TEM_000121/TVA_TEM_000121_குப்பல்நத்தம்_சமணக்குடைவரை-கோயில்_மகாவீரர்-0014.jpg
TVA_TEM_000121/TVA_TEM_000121_குப்பல்நத்தம்_சமணக்குடைவரை-கோயில்_தீர்த்தங்கரர்கள்-0015.jpg
|